செய்யாறு: உறவினர் வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் மாயம்

117பார்த்தது
செய்யாறு: உறவினர் வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் மாயம்
செய்யாறு அருகே உறவினர் வீட்டில் தங்கியிருந்த 25 வயது இளம்பெண் காணாமல் போனதை அடுத்து, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த சில மாதங்களாக செய்யாறில் தங்கியிருந்தார். வியாழன் காலை முதல் அவரை காணவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி