கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எம். எல். ஏ தலைமையில் ஆலோசனை.

0பார்த்தது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எம். எல். ஏ தலைமையில் ஆலோசனை.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் வரும் 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 1,600 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் கடந்த 5 ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் செங்கம் தொகுதி எம்எல்ஏ மு. பெ. கிரி பங்கேற்று, தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவுபெற்றதாகத் தெரிவித்தார். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகக் கூறினார்.