திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று (11/06/2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இத்திருக்கோயில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர பணிகளை முடித்து பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இ.ஆ.ப., சட்டப்பேரவை செயலாளர் முனைவர். கி. சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் மோகன், சா. மாங்குடி, இரா. அருள், ஜெயக்குமார், உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.