திருவண்ணாமலை: குப்பனத்தம் அணை திறப்பது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை

69பார்த்தது
திருவண்ணாமலை: குப்பனத்தம் அணை திறப்பது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, அதிகாரிகள் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

குப்பனத்தம் அணை தற்போது முழுக்கொள்ளளவுடன் தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது. தற்போது, கோடை வெயில் தொடங்கிய நிலையில் செங்கம், புதுப்பாளையம், காஞ்சி பகுதியில் உள்ள சில விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதனால் சில விவசாயிகள் பயிர் செய்ய முடியாமலும், நிலத்தில் உள்ள பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமலும் உள்ளது. 

எனவே, விவசாயிகள் குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம் பகுதிக்கு உள்பட்ட விவசாயிகள் மற்றும் ஏரிப்பாசன சங்க நிர்வாகிகளை அழைத்து செங்கம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இதில், செங்கம் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் அரிஹரன் வரவேற்றார். மாவட்ட உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் பங்கேற்று விவசாயிகளிடம் குப்பனத்தம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனைகளை கேட்டறிந்தார்.