திருவண்ணாமலை: அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

251பார்த்தது
திருவண்ணாமலை: அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் பிப்ரவரி 18 அன்று “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு, பதிவேடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட ஆட்சியர், பணிகள் தரமாக நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டாட்சியர் துரைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி