திமுக தேர்தல் பணிக்குழு கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை

7பார்த்தது
திமுக தேர்தல் பணிக்குழு கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிக் குழுக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எ.வ.வேலு பங்கேற்று, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவர்கள் கொடுக்கலாம் என்றும், 'வெல்லும் தமிழ் பெண்கள்' பரப்புரை பயிற்சி நடத்தக் கோரியும், திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி