வந்தவாசி: கோழி வியாபாரி லாரி மோதி பரிதாப பலி

436பார்த்தது
வந்தவாசி: கோழி வியாபாரி லாரி மோதி பரிதாப பலி
வந்தவாசி அடுத்த கீழ்சாந்தமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த அசாருதீன் (25) என்பவர், இறைச்சி கோழிகளை வேனில் ஏற்றி சேத்துப்பட்டு, பெரணமல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை வங்காரம் கூட்ரோடு அருகே எதிரே வந்த லாரி மீது அவரது வேன் மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொன்னூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you