திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ. வ. வேலு எம்எல்ஏ, மே 17 அன்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு ஒன்றியம் மற்றும் தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளுக்கு நேரில் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்களிடம் நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.