நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் விவசாயிகள் அவதி

148பார்த்தது
நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் விவசாயிகள் அவதி
செங்கம் அருகே அரட்டவாடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நிரந்தர கட்டடம் இல்லாததால் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்படுகின்றன. மழை மற்றும் திருட்டு அச்சத்தால் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் தார்ப்பாய்கள் வாங்கி பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு கிட்டங்கிக்கு கொண்டு செல்ல வாகன வசதி இல்லாததால் கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி