தி.மலை: கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

66பார்த்தது
தி.மலை: கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தலைமையில் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது ஒன்றிய கழக செயலாளர் மு. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அ. தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் தனுசு, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஜெ. குமார், ஏசுதுரை, ஏழுமலை, சையத்மாலிக், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வ. முத்துமாறன், பி. வசந்தகுமார், ரகுபதி, வில்லியம்ஸ்தாகூர், ஜீ. நீலகண்டன், ஜான்சன், ஆதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி