பரமானந்தல் அரசு பள்ளியில் கேஸ் சிலிண்டர் தீப்பிடிப்பு

2பார்த்தது
பரமானந்தல் அரசு பள்ளியில் கேஸ் சிலிண்டர் தீப்பிடிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமானந்தல் அரசு ஆரம்பப் பள்ளியில், கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, இன்று மதிய உணவு தயாரிக்கும்போது சமையலறை கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி