திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

173பார்த்தது
திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (மே 30) இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழைப்பொழிவு சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்கக்கூடும். இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியில் நிற்பதையும், திறந்த வெளியில் நடப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை நின்ற பிறகு பாதுகாப்பாக கிரிவலம் மேற்கொள்ளலாம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி