அரசு வீடு பெற்ற இருளர் தம்பதி.. நெகிழ்ச்சி

201பார்த்தது
அரசு வீடு பெற்ற இருளர் தம்பதி.. நெகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் மேல்சங்கம் ஊராட்சியில் வசித்த இருளர் இனத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி–முனியம்மாள் தம்பதியினர், அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ₹5.73 லட்சம் மதிப்பில் புதிய வீடு பெற்றனர். மின்சார வசதியும் செய்து தரப்பட்டது. இவர்களின் நிலையை அறிந்த வட்டாட்சியர் முருகன் நடவடிக்கை எடுத்தார். நன்றியறிதலாக தம்பதியினர் அலுவலகம் சென்று தேன், கிழங்கு வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தனர். அரசு நலத்திட்டம் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்ததற்கான நெகிழ்ச்சி நிகழ்வாக இது அமைந்தது.

தொடர்புடைய செய்தி