திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மதுரபெரும்பட்டூா் ஸ்ரீகிருஷ்ண பகவான் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் நடைபெற்றது. விழாவையொட்டி புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், திவார பூஜை, யாக பூஜைகள், மகா பூா்ணாஹுதி, வேதபிரபந்த சாற்றுமுறை, மகாசாந்தி ஹோமம், விஸ்வரூபம், கோ பூஜை, ஆராதனம், கும்ப புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் பச்சைமுத்து, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.