செங்கம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

127பார்த்தது
செங்கம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வியாழக்கிழமை அதிகாலை மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காமாட்சிபட்டி கிராமத்திலிருந்து திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பயணித்த வேன், அரசங்கண்ணி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல்செங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி