செங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

185பார்த்தது
செங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில், செங்கம் ஒன்றியத்தின் மண்மலை, செ. நாச்சிப்பட்டு, பிஞ்சூர் ஊராட்சிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி இந்த முகாமை துவக்கி வைத்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.