திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் டவுன் மில்லத்நகர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுடன் நோன்பு திறந்தார். பேரூராட்சி தலைவர் எச். சாதிக்பாட்ஷா, பேரூராட்சி உறுப்பினர் ஜாபிர்பாஷா, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அப்துல்சர்தார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன் மற்றும் நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.