தி.மலை: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ

69பார்த்தது
தி.மலை: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025 - 2026-ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கடந்த ஆண்டு 10-ம் 12-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் 100-சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை திருவண்ணாமலை மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி வழங்கி ஊக்குவித்தார். இந்நிகழ்வின்போது, ஒன்றிய கழக செயலாளர் கோ. இரமேஷ், மு. ஒன்றிய செயலாளர் சி. ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். ஜோதி, து. வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி, நகர செயலாளர் அ. சுப்பிரமணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் எஸ். சதீஷ்குமார், ஆ. மாதேஸ்வரன், அ. மணிகண்டன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you