பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

9பார்த்தது
பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பர்வதமலை ஏற புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு 100 பேர், 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் மட்டுமே ஏறலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 800 பேருக்கும் இணைய வழியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஆன்மீகப் பயணமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி