திருவண்ணாமலை: திருடுபோன நகையை மீட்டுத் தரக்கோரி மறியல்

59பார்த்தது
திருவண்ணாமலை:  திருடுபோன நகையை மீட்டுத் தரக்கோரி மறியல்
திருவண்ணாமலையை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 50 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து பல்வேறு ஆதாரங்களை அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாகக் கூறி, சரவணன் குடும்பத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்ல முயன்றனர்.