ஜமுனாமரத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் உடனடியாக இப்பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.