தி.மலை: அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை

59பார்த்தது
தி.மலை: அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவம் கடந்த 30-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் உற்சவர் மூர்த்தியும் அம்பாளும் எழுந்தருளுவார். அருணாச்சலேஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் தினமும் இரவு உலா வந்து அருள் புரிவார்கள். 

பின்னர் வீதிகளில் திருவீதி உலா வந்து அருள் புரிவார். இரவு அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மகிழ மரத்தின் அருகே எழுந்தருள்வார். அப்போது சேடிப்பெண், சுவாமி மீது பூச்சொரியும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையார் மலர் ஆடை அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது மின்விளக்குகள் அணைக்கப்பட்டு விளக்கு ஒளியில் சிவபெருமான் மன்மதனை தேடும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் சித்திரை வசந்த உற்சவ விழாவின் 8-ம் நாள் பூச்சொரியும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 12 மணி அளவில் மூன்றாம் பிரகாரத்தில் மன்மதனை சிவபெருமான் தேடும் ஒளிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அண்ணாமலையார் மலர் ஆடை அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போழுது மின்விளக்குகள் அணைக்கப்பட்டு விளக்கு ஒளியில் சிவபெருமான் மன்மதனை தேடும் நிகழ்ச்சி நடந்தது. 9-ம் நாள் உற்சவத்தில் சிவபெருமானிடம் மன்மதன் சிக்கிக்கொள்வான். இதையடுத்து 10-ம் நாள் உற்சவத்தில் மன்மதன் தகனம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி