திருவண்ணாமலை: ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்

67பார்த்தது
திருவண்ணாமலை: ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பத்து நாள் கருடசேவை உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்திலும், 6-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. மூன்றாம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கோபுர தரிசனம் நிகழ்ச்சியும், 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன. 7-ஆம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. 

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட பண்டரெட்டியார்கள் அறக்கட்டளைத் தலைவர் வெங்கடாஜபதி மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர். அறங்காவலர் குழுத் தலைவர் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவர் வழக்குரைஞர் கஜேந்திரன் உள்ளிட்ட பத்து நாள் திருவிழா உபயதாரர்கள், விழாக்குழுவினர், ஊர் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி