திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலம் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தொகுதி எம்எல்ஏ மு. பெ. கிரி கும்பாபிஷேகம் செய்வது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை அவர் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். அவரை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அன்பழகன் வரவேற்றார்.