திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 21-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற 24-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. மகா தீபம் டிசம்பர் 3-ந்தேதி மலை உச்சியில் ஏற்றப்படும். அன்றைய தினம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில், மாடவீதி, கிரிவலப்பாதையில் 572 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்படுகின்றன. ஏற்கனவே 259 நிரந்தர கேமராக்கள் உள்ளன.