திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் பழைய வீடு இடிக்கும் போது இடிபாடுகளில் சிக்கி 2 சிறுவர்களின் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.