திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வார இறுதி என்பதால் அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கோழி இறைச்சி கிலோ ரூ.160 முதல் ரூ.360 வரையிலும், ஆட்டு இறைச்சி கிலோ ரூ.420 முதல் ரூ.800 வரையிலும் விற்பனையானது. மீன்களில் கட்லா ரூ.160, நெத்திலி ரூ.320, இறால் ரூ.300, நண்டு ரூ.250, ஜிலேபி ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது.