வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் பயிற்சிக் கூட்டம்.

0பார்த்தது
வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் பயிற்சிக் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 37 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த மகளிருக்காக 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இறையூரில் நடைபெற்ற இந்த முகாமில், திமுக ஆட்சியின் கீழ் மகளிருக்கான உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், இலவச பேருந்து பயணம், மகளிர்க் குழுக்களுக்கு வட்டியில்லா கடன், இலவச விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. தொகுதி எம்எல்ஏ மு. பெ. கிரி இந்த பயிற்சி முகாமினைத் தொடங்கி வைத்துப் பேசினார். சுமார் 400 பெண்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி