வந்தவாசி: கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது

184பார்த்தது
வந்தவாசி: கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது
வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பாகரன் தலைமையிலான போலீசார், விளாங்காடு நெடுஞ்சாலை இரும்பேடு கூட்டுச்சாலையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டபோது, உத்திரமேரூர் நோக்கிச் சென்ற ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் கத்தி மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்ப முயன்ற ஆட்டோவில் வந்த சபரி (28), ஸ்ரீநாத் (22), ஆகாஷ் (24), மோகன் (22), குமரன் (19) ஆகிய 5 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி