திருவண்ணாமலை: ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

59பார்த்தது
திருவண்ணாமலை: ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து அன்று இரவு அன்ன வாகனத்திலும், மறுநாள் இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. மூன்றாம் நாளான சனிக்கிழமை (ஜூன் 7) இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையொட்டி, சுவாமிக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் விழாக்குழுவினர், உபயதாரர்கள் முன்னிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு, திருமண வரவேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் சுவாமியை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது. மேலும், கோயில் அருகே கலை நிகழ்ச்சி மற்றும் அதிகாலையில் வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி