
செய்யாறு: அதிமுக வேட்பாளர் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பு
செய்யாறை அடுத்த கீழ்நெல்லிக் கிராமத்தில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன், திங்கள்கிழமை கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். சித்தாத்தூா், திருவடிராயபுரம், கீழ்நெல்லி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பின் போது, அப்பகுதியில் அதிமுக வேட்பாளா் டிராக்டா் ஓட்டியும், கட்டடப்பணியில் ஈடுபட்டும் கிராம மக்களிடம் ஆதரவு திரட்டினாா்.















