திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 6059.993 கிலோ கிராம் அளவிலான பொருட்கள் இன்று (02.03.2026) சாட்சிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 318 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக நாசப்படுத்தப்பட்டன என காவல்துறை தெரிவித்துள்ளது.