செய்யாறு அருகே கிராமத்தில் அறுந்து விழுந்த மின் கம்பி.

0பார்த்தது
செய்யாறு அருகே கிராமத்தில் அறுந்து விழுந்த மின் கம்பி.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. ராஜீவ் காந்தி நகா் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் செல்லக் கூடிய மின் இணைப்புக் கம்பியில் 11 கே. வி. உயா் மின்னழுத்த கம்பி பட்டு, சாட் சா்க்யூட் ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தொலைக்காட்சி, குளிா்சாதன இயந்திரம் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இது மூன்றாவது முறையாக உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளதால், வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டேக்ஸ் :