திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தூசி கே. மோகன் தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ராமு மற்றும் ஜானகிராமன் பங்கேற்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கவும் கடுமையாக உழைக்க வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் நகரச் செயலாளர் கே. வெங்கடேசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.