திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் திண்ணை பிரசாரம் நடைபெற்றது. மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பேரவை மாவட்டச் செயலர் பாரி பி. பாபு தலைமை வகித்தார். ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஒன்றியச் செயலர் ஜி. வி. கஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்துகொண்டு, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை ஆரணி பஜாரில் வியாபாரிகள், பொதுமக்களிடம் விநியோகம் செய்தார். கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் எல். ஜெயசுதா, மாவட்ட அவைத் தலைவர் அ. கோவிந்தராசன், நகரச் செயலர் அசோக்குமார், மாவட்ட இணைச் செயலர் வனிதா சதீஷ், ஒன்றியச் செயலர்கள் க. சங்கர், ஜெயப்பிரகாசம், திருமால், நகரமன்ற உறுப்பினர்கள் சுதா குமார், பாரதிராஜா, கிருபாசமுத்ரி சதீஷ், சசிகலா சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.