திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிறு விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்கள் 870 பேர் பங்கேற்ற தடகளப் போட்டிகள் நடைபெற்றன. செய்யாறு செஸ் டெவலப்பர்ஸ் மற்றும் லோட்டஸ் ஃபுட்வேர் என்டர்பிரைசஸ் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில், அனக்காவூர், செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூர் வட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ரூ. 8.50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செய்யாறு டி.எஸ்.பி. தி. கோவிந்தசாமி மற்றும் நிறுவன பொது மேலாளர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.