தி. மலை மத்திய மாவட்ட கழகம் ஆரணி சட்டமன்றத் தொகுதி ஆரணி நகர கழகத்தின் சார்பில், பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை மேற்பார்வையிட்டு செய்து முடிப்பதற்காக கள ஆய்வு கூட்டத்தில் தி. மலை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வரகூர் A. அருணாச்சலம், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர். S. இராமச்சந்திரன், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் நேரில் சென்று பூத் களை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில், தி. மலை மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள், ஆரணி & போளூர் சட்டமன்ற கழக நிர்வாகிகள், நகர ஒன்றிய பேரூராட்சி கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி, வட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய குழு, நகர பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், ஐ டி விங் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.