திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லிக் கிராமத்தில் கூரை வீடு தீ விபத்தில் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளி ஜெயபால்-ரமணி தம்பதியினருக்கு, செய்யாறு தொகுதி எம். எல். ஏ. ஒ. ஜோதி அறிவுறுத்தலின் பேரில், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக செயலா் ஜேசிகே. சீனிவாசன் நேரில் சென்று ஆறுதல் கூறி, அரிசி மற்றும் ரொக்கப் பணம் ரூ. 2 ஆயிரத்தை நிவாரண உதவியாக வழங்கினாா். மேலும், அரசின் நிவாரண உதவி மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க எம்எல்ஏ மூலம் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.