திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வடஇலுப்பை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (47) என்பவர் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கச் சென்ற நிலையில், மறுநாள் காலை வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். ஏரியில் அவரது உடைமைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை அவரது உடல் ஏரியில் மிதந்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.