திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் மத்திய மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தரணிவேந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வ.அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேஷ் பாபு, ஏ.மோகனவேல், செய்யாறு நகர செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஜே.கே.சீனிவாசன், எம்.தினகரன், என்.சங்கர், சி.கே.ரவிக்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.