செய்யாறு: அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு

54பார்த்தது
செய்யாறு: அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவர்களுக்கான 2-ஆம் கட்ட பொது கலந்தாய்வு திங்கள், செவ்வாய் (ஜூன் 9, 10) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் என். கலைவாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவர், மாணவிகளுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ஜூன் 9-இல் அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி, கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் பிசிஏ கணினிப் பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளில் 280 - 161 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 10-இல், கலைப் பாடப்பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், பி.காம்., வணிகவியல் (பொது), வணிகவியல் (நிதி மற்றும் கணக்கு), பிபிஏ (வணிக நிர்வாகவியல்) ஆகிய பாடப் பிரிவுகளில் 280 - 161 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 10-இல் மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறப்புத் தமிழ் (60 - 35 மதிப்பெண்கள்) மற்றும் பகுதி -1, தமிழ், அதேபோல், சிறப்பு ஆங்கிலம் (60 - 35 மதிப்பெண்கள்) பகுதி -11 ஆங்கிலம் (60 - 35 மதிப்பெண்கள்) பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி