தி.மலை: பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

64பார்த்தது
தி.மலை: பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களை மாணவியர்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி இன்று (02.06.2025) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இஆப, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி