திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 5.90 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டடம், ரூ. 9.80 கோடியில் வடதண்டலம், செங்கட்டான்குண்டு, ஏனாதவாடி ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து திட்ட இயக்குநர் மணி கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். முன்னதாக, செய்யாறு ஊராட்சி ஒன்றிய ஆய்வுக் கூட்டரங்கில் மாவட்ட திட்ட இயக்குநர் மணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், பணிப் பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் இல. சீனிவாசன், உதவி பொறியாளர்கள் எம். ராமு, பி. செல்வா ஆகியோர் உடனிருந்தனர்.