திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், திருப்பனமூர் கிராம ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததால், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஏரியில் அவரது உடல் மிதந்ததைக் கண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.