மாநில அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறினார். இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் ஆ. மோகனவேல், ஆணையாளர் வி. எல். எஸ். கீதா, திமுக நகர செயலாளர் கே. விஸ்வநாதன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.