திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த பல்வேறு அரசு கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ. ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கலைஞா் கலையரங்கம், கிராம நிா்வாக அலுவலகம், நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து, குடும்ப அட்டைத்தாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவா் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.