திருவண்ணாமலை மாநகராட்சி அமராவதி முருகையன் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் இன்று (10.06.2025) ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ், இஆப., சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), அருள் (சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர்), மாங்குடி (காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்), மோகன் (அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர்), ஜெயக்குமார் (பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.