செய்யாற்றில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், மத்திய அரசு போல மாநில அரசும் விவசாயிகளுக்கு ரூ.6000 மானியம் வழங்க வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விலையை ரூ.36 ஆக உயர்த்த வேண்டும். உர மானியத்துடன் தமிழக அரசும் ரூ.270 சேர்த்து வழங்க வேண்டும். மேலும், ஊரக வேலைத் திட்டப் பணி நாட்களை 125 ஆக உயர்த்தி, விவசாயப் பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் பொம்மைக்கு கோரிக்கை மனுவை அளித்து ஆதரவு திரட்டினர்.