ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி.

0பார்த்தது
ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நல உதவிகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். செய்யாறு நகர அதிமுக சார்பில் ஆரணி கூட்டுச் சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், திருவோத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் கே. வெங்கடேசன் ஏற்பாட்டில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டச் செயலாளர் தூசி கே. மோகன் பங்கேற்று ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் சுமார் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அ. ஜனார்த்தனன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ். ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி