திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வருகிற 22-ஆம் தேதி மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மையம் மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இந்த முகாமில் 120-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 7000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தவுள்ளன. 18 முதல் 35 வயதுடைய வேலை தேடுவோா், தகுந்த ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம். இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தையும் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தொடங்கிவைத்தாா்.